பெண் எம்.பி.யை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை முதல்வர் இல்லத்தில் வைத்து பிபவ் குமார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி அருணா ஆசஃப் அலி மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்.