குஜராத்தில் போலீஸ் வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைத்து எரித்ததால், பரபரப்பு நிலவியது.
சாபர்கந்தா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், ஹிம்மாத்நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த போது போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் பொதுமக்கள், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, அதற்கு தீ வைத்து எரித்தனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.