திமிங்கலங்களையும் மனிதர்களாக அங்கீகரித்து நியூஸிலாந்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
திமிங்கலங்களின் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், சுதந்திரமாக கடலில் நடமாடவும், கலாசாரத்தைப் பேணிக் காக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரகடனத்தில் நியூஸிலாந்தின் மாவோரி மன்னரும், பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர். அதன்படி, திமிங்கலத்துக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு தண்டனை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.