T20 உலக கோப்பை தூதராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
T20 உலக கோப்பை அடுத்த வாரம் தொடங்குகிறது. மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்காவில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில், T20 உலக கோப்பை தூதராக ஷாஹித் அஃப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே யுவராஜ் சிங், கிறிஸ் கெயில், தடகள வீரர் உசேன் போல்ட் ஆகியோர் T20 உலக கோப்பை தூதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பட்டியலில் ஷாஹித் அஃப்ரிடியும் இணைந்துள்ளார்.