ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி வாக்களித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் டோனி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். .ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் அவர் ராஞ்சி திரும்பினார்.