கடலூர் அருகே முதியவரை தாக்க முயன்ற சிறுத்தையை, மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், சேமுண்டி பகுதியைச் சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.
இதனை அறியாத பாப்பச்சன் தனது வீட்டிற்குள் சென்றபோது, வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை, முதியவரை தாக்க முயன்றுள்ளது.
இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதியவர், சிறுத்தை வீட்டிற்குள் இருந்து வெளியேறாமல் இருக்க வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.