ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சொந்த செலவில் மின்விசிறிகள் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை நீடித்து வருகிறது.
விபத்து மற்றும் எலும்புமுறிவு ஏற்பட்டு வரும் நோயாளிகள் 7 நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
இந்நிலையில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில் 12 பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 4 மின்விசிறிகள் மட்டுமே உள்ள நிலையில் நோயாளிகள் சொந்த செலவில் மின்விசிறி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.