உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் நேபாளத்தைச் சேர்ந்த பூர்ணிமா ஸ்ரஸ்தா என்ற பெண், 3 வாரத்தில் 2 முறை ஏறி சாதனை படைத்திருக்கிறார்.
கடல் மட்டத்திலிருந்து 8848.86 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்டில் கடந்த மே 12, மே 19 ஆகிய தினங்களில் பூர்ணிமா ஏறிய நிலையில், நேற்று காலை 5.50 மணிக்கு 3-ஆவது முறையாக எவரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை வாடிக்கையாக கொண்ட பூர்ணிமா, இதுவரை நான்கு முறை அதன் உச்சியை அடைந்துள்ளார்.