மயிலாடுதுறையில் வீட்டில் தனியாக வசித்து வரும் மூத்த குடிமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வீடுகளில் தனியே வசித்து வரும் மூத்த குடிமக்களை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், மூத்த குடிமக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமஞ்சன வீதி, காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களை சந்தித்து காவல் ஆய்வாளர் சுப்ரியா குறைகளை கேட்டறிந்தார்.