தென்காசியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 496 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேந்தமரம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மணிகண்டன், வடிவேல், நாகராஜன், சிவா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2 ஆயிரத்து 496 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.