கன்னியாகுமரியில் கனமழையால் சாலையில் குளம்போல தேங்கிய நீரில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக குமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சுசீந்திரம் தேரூர் சாலையில், மழையால் குளத்தில் இருந்து வெளியேறிய நீர் குடியிருப்பு சாலையை சூழ்ந்தது.
சாலைகளில் தேங்கிய நீரில் அப்பகுதி சிறுவர்கள் குளித்து கும்மாளமிட்டனர். மேலும் கனமழை தொடர்ந்தால் பெரியகுளம் உடைந்து குடியிருப்புகளை வெள்ளம் சூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.