தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வயல்வெளியில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர்.
புளியரை பகுதியில் உள்ள ராபர்ட் என்பவருக்கு சொந்தமாக வயல்வெளியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 10 அடி நீளம்கொண்ட கொடிய ராஜநாகத்தை பிடித்தனர். அதனைத்தொடர்ந்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜநாகம், அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.