சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி மற்றொரு சீசனில் விளையாடுவார் என நம்புவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
சங்கர நேத்ராலய மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அம்பத்தி ராயுடு, தோனி மற்றொரு சீசனில் விளையாடுவார் என நம்பிக்கை உள்ளதாகவும், தினேஷ் கார்த்திக், தோனியின் நிழலாக இருந்து சாதனை படைத்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.