தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து 90 மைல் தொலைவில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தளமான லோப்புரியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் குரங்குகளைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், மொத்தமுள்ள 2,500 குரங்குகளில் வெறும் 30 குரங்குகள் மட்டுமே சிக்கின.
அந்தக் குரங்குகள் மயக்க ஊசி செலுத்தப்பட்டு காட்டு பகுதிக்குள் விடப்பட்டன. சில குரங்குகளுக்கு கருத்தடையும் செய்யப்பட்டது.
கூண்டு வைக்கப்பட்டதால் பிற குரங்குகள் உஷாராகிவிட்டன. அவற்றை பிடிக்க முடியாமல் தாய்லாந்து அரசு விழிப்பிதுங்கி நிற்கிறது.