தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை பொதுமக்களே சீரமைத்தது பேசுபொருளாகியது.
ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் தாங்களாகவே கற்கள், சல்லி, மண் உள்ளிட்டவற்றை வைத்து சாலையை சீரமைத்தனர்.
அரசின் அலட்சியப்போக்கை இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.