ராமநாதபுரத்தில் 3 சக்கர சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
தங்கச்சி மடத்தை சேர்ந்த சிலம்பரசன், தனது 3 சக்கர வாகனத்தில் மனைவி தங்கம்மாள், அப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் சிறுவன் சதீஷ் ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார், இவர்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தங்கம்மாள், மாரியம்மாள், சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.