நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
சேமுண்டி கிராமத்தை சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்கு சொந்தமான தேயிலைதோட்டத்தில் தொகுப்பு வீடு ஒன்று உள்ளது.
ஆள் இல்லாத இந்த வீட்டிற்குள் வழக்கம் போல் பாப்பச்சன் வந்த போது அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த சிறுத்தை அவரை தாக்கமுயன்றது.
இதில் தப்பித்த விவசாயி வீட்டை வெளிபக்கமாக பூட்டி வனத்துறையினருக்கு தகவலளித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையை மயக்க ஊசி மூலம் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.