குமரியில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதனையடுத்து குளச்சல், தேங்காய்பட்டிணம், முட்டம் உள்ளிட்ட கட்டுமர மீனவர்கள் கடந்த 8 நாட்களாக கடலுக்கு செல்லாமல் கட்டுமரங்களை மேடான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.