அமெரிக்காவில் நாய்களுக்கு உகந்த விமான சேவை முதன்முறையாக தொடங்கப்பட்டு அதற்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்க் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் நாய்களுக்காக பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு பயணம் என்றால், 6 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 ரூபாயும், சர்வதேச பயணத்துக்கு 8 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.