திருப்பூர் அருகே விநாயகர் கோவில் கட்ட இஸ்லாமியர்கள் 3 சென்ட் நிலம் வழங்கிய நிலையில், ஏழு தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் படியூர் அடுத்த ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பள்ளி வாசல் உள்ள நிலையில், இந்து மக்கள் வழிபாடு செய்ய எந்த ஒரு கோவிலும் இல்லாத நிலை இருந்தது.
இதனை பாேக்கும் வகையில், முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை விநாயகர் கோவில் கட்ட தானமாக வழங்கி இருந்தனர்.
கோவில் கட்டும் நிறைவடைந்த நிலையில், இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலுக்கு வழங்கினர். மேலும், விழாவில் இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.