கும்பகோணம் திருப்பாலைத்துறை வீரமாகாளியம்மன் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.
மேலும் இந்த ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு திருப்பாலைத்துறை அருகே உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.