ஈரோட்டில் கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் பணிகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் முக்கிய பாசன ஆதாரமாக கீழ்பவானி பாசன கால்வாய் இருந்து வருகிறது.
இந்நிலையில் கான்கிரீட் அமைத்து சீரமமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என தெரிவித்து விவசாயிகள் கால்வாயில் இறங்கி பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல ஆண்டுகளாக கால்வாயில் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வெட்டி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.