திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கார் மோதி தந்தை மகன் பள்ளத்தில் விழுந்த சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டர் இட்டேரி சாலையில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தமது மகனுடன் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது கார் ஒன்று சாலையில் திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் மோதியது, இதில் இருவரும் பள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை துரிதமாக மீட்டனர்.
இருவரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் விபத்து குறித்த சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.