தேசிய கல்விக்கொள்கை புதிய இந்தியாவுக்கானது என்றும் அதை நடைமுறைப்படுத்துவது நமது இலக்கு என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் என ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக்கொண்டார்.
உதகையில் 2 நாட்கள் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கியது.
மாநாட்டில் மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் பெரும்பாலானோர் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடக்க விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவரின் “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்ற குறளை நினைவுகூர்ந்தார்.
மேலும் இன்றைக்குப் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்க வள்ளுவரின் குறள்தான் அடித்தளம் அமைத்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய கல்விக்கொள்கை புதிய இந்தியாவுக்கானது என்றும், அதை நடைமுறைப்படுத்துவது நமது இலக்கு என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.