சென்னையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் கணினி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, சென்னையில் உள்ள வாக்கு என்னும் மையங்களில் மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் வாக்கு எண்ணும் பணிக்காக ஆயிரத்து 433 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு நாளை மறுதினம், வரும் 3 மற்றும் 4-ம் தேதி காலை என 3 முறை பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.