திருச்சி மாவட்டம், திருவானைக்கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் சிவனடியார்கள் திருக்கூட்டமைப்பு சார்பில் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட 63 நாயன்மார்களின் திருவீதி உலா பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.