வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அருகே பேருந்து மோதியதில் கணவன் கண் முன்பே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி – பரிமளா தம்பதியினர். பால் வியாபாரம் செய்து வரும் இவர்கள் வழக்கம் போல் பால் விற்பனைக்காக குருவராஜபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வந்த அரசு பேருந்து மோதியதில் பரிமளா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.