சென்னை அண்ணாநகரில் உள்ள SEA SHELL உணவகத்தில் வழங்கப்பட்ட சாண்ட் விச்சில் ஈ இருந்ததைக் கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.
அண்ணாநகரில் இயங்கிவரும் பிரபல SEA SHELL உணவகத்தில் நாகபுஷ்பம் என்பவர் குடும்பத்துடன் உணவருந்த சென்றார்.
அப்போது அவருடைய மகனுக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் ஈ இருந்ததை கண்ட நாகபுஷ்பம் அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக உணவக மேலாளரிடம் கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்ததையடுத்து, சுகாதாரத்துறைக்கு நாகபுஷ்கம் புகாரளித்துள்ளார்.