சிவகங்கை அருகே 4 மாத பச்சிளம் குழந்தையை அடித்துக் கொலை செய்து புதைத்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டகுடியைச் சேர்ந்த சந்திரசேகரன் – ஷாலினி தம்பதிக்கு 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் 4 மாத குழந்தை தலையில் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்ததில் கொலை செய்தது உறுதியானது. விசாரணையில் மற்றொருவருடன் திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்ததால், தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த குழந்தையின் தாய் ஷாலினி உட்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.