திருவள்ளூரில் உள்ள சோழவரம் நீர் தேக்கத்தின் கரையை பலப்படுத்தும் பணிகள் 40 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, கடந்த 2014ஆம் ஆண்டு கரைகளை பலப்படுத்துதல், கலங்கல் உயரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையில், சோழவரம் நீர் தேக்கத்தின் கரைகளில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதை அடுத்து, கரையை பலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.