சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே செல்லும் 8 மின்சார ரயில்கள் பாதியில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காலை 11 மணி முதல் மின்சார ரயில்கள் இயங்காது எனவும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு சந்திப்பு வரையிலான 8 ரயில்களும் சிங்கபெருமாள் கோவில் வரையிலும் இயக்கபடும் என ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.