இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் இந்து உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக பகவத் கீதை நூல் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் Sir Lindsay Hoyle-விடம் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் சைலேஷ் ஓரா பகவத் கீதையை வழங்கினார். புனிதமான பகவத் கீதை நூலைப் பெற்றது, தமக்கு கிடைத்த மரியாதை என சபாநாயகர் Sir Lindsay Hoyle கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், மாயாபூரிலிருந்து சிறப்பு பூஜை செய்து கொண்டுவரப்பட்ட இந்த பகவத் கீதை நூல், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிறகு பயன்படுத்தப்படவுள்ளது.