அபுதாபியில் உள்ள முதல் இந்துக் கோயிலில் தரிசனம் செய்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தக் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தார்.
அவர் தரிசனம் செய்யும் வீடியோவை கோயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
சென்னை திரும்பிய நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நடிகர் ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் கோல்டன் விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது.