ஓரினச்சேர்க்கையாளர்களை போப் பிரான்சிஸ் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது மேலை நாடுகளில் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் பாதிரியார்களை சந்தித்து பேசிய போப் பிரான்சிஸ், ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒருபோதும் பாதிரியாராக கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கருத்தரங்குகளும், பாதிரியார் கல்லூரிகளும் ஏற்கெனவே முட்டாள்தனத்தால் நிரம்பியிருப்பதாக அவர் பேசியதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.