ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 484 கோடி ரூபாய் மதிப்பில் 6 ஆயிரத்து 208 ஊரக சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 97 ஆயிரத்து 414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரீட் கூரை அமைப்பதற்காக 4 ஆயிரத்து 35 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2 லட்சத்து 56 ஆயிரத்து 508 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 71 ஆயிரத்து 960 கோடி ரூபாய் வங்கிக்கடன் பெற்று தந்துள்ளதாக கூறியுள்ள தமிழக அரசு, 511 முகாம்கள் மூலம் 92 ஆயிரத்து 3 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.