புதுச்சேரி காரைக்கால் அருகே 13 வயது சிறுவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலையடுத்து, போலீசார், நாகை – காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுவன் திருப்பட்டினத்தை சேர்ந்த சந்தோஷ் என்பதும், அதே பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற இளைஞருடன் விளையாடிய பின்னரே, இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இளைஞனின் வீட்டில் இருந்து கத்தி மற்றும் கையுறைகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சாகுல் ஹமீதை தேடி வருகின்றனர்.