நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் மொர்சிபியில் இருந்து தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 600 கிலோ மீட்டருக்கு அப்பால் ஏங்கா மாகாணத்தில் உள்ள கவுகோளம் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளார். மேலும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.