சிறுபான்மையின மக்களின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இட ஒதுக்கீடு ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியது ஏன் என்பதை விளக்கினார், ஓபிசி சான்றிதழை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இட ஒதுக்கீடு தொடர்பான எதிர்க்கட்சிகளின் அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு மற்றொரு தரப்புக்கு அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அனுதாபிகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் உண்மையில் அவர்களின் மிகப்பெரிய எதிரிகள் என்று பிரதமர் மோடி கூறினார்.
கல்வி நிறுவனங்களை சிறுபான்மை நிறுவனங்களாக மாற்றப்பட்டு இட ஒதுக்கீடு அகற்றப்பட்டதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.