மிசோரம் மாநிலம் அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழையில் கல்குவாரி இடிந்து விழுந்து,10 பேர் உயிரிழந்தனர்.
ரீமால் புயல் கரையை கடந்த நிலையில் வட கிழக்கு மாநிலங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மிசோராம் மாநிலம் அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் அங்குள்ள கல்குவாரி இடிந்த விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.