கரூர் அருகே தனியார் காற்றாலை மின் கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிச்சம்பட்டியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் மண் சாலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தனியார் காற்றாலை மின்வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மின் கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்கக் கோரி மஞ்ச நாயக்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.