நெல்லை மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிக்கு 306 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையொட்டி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. நெல்லை தொகுதியைப் பொறுத்தவரை நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தலில் 64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.