ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்துலக முத்தமிழ் மாநாட்டிற்காக அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறும் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகப்பெருமானின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அறநிலையத்துறை,
மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் தனி இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், முருகப்பெருமானை கருப்பொருளாக கொண்ட ஆய்வு கட்டுரைகளையும் தனி இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.