ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர் கையும் களவுமாக சிக்கினார்.
கன்னிமார் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகனுக்கு குழந்தை பிறந்த நிலையில், திருச்சியில் உள்ள மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டதை அறிந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடிய இருவரை கையும் களவுமாக பிடித்தார்.
இதில் ஒருவர் தப்பியோடிய நிலையில், பிடிப்பட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.