மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் எழுந்தருளினர். தீபாராதனைக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.