மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்த தெப்பக்குளம், 1,000 அடி நீளம், 950 அடி அகலத்துடன் சதுர வடிவில் அமைந்துள்ளது.
இதை நிரப்ப வைகையில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வைகை ஆற்றில் வரும் நீரால் மதுரை தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது. தெப்பக்குளம் நிரம்பி வருவதால், குடிநீருக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.