மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஜூன் முதல் வாரம் வரை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்தல் நடத்தை விதிகளால் பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 லட்சத்து 96 ஆயிரத்து 510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33 லட்சத்து 57 ஆயிரத்து 352 பாமாயில் பாக்கெட்டுகள் குடும்ப அட்டைத்தாரர்கள் பெற்று செல்ல தயார் நிலையில் உள்ளதாகவும்,
8 லட்சத்து 11 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு மற்றும் 7 லட்சத்து 15 ஆயிரத்து 395 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைத்தாரர்கள் மே மாத ஒதுக்கீட்டினை மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக அரசு,
மே இறுதிக்குள் பெற இயலாதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.