புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவுகளை திரித்ததாகவும், அதற்காக கைதான மருத்துவர்கள், மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் மருத்துவமனை ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார்.
மேலும், சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையை திரித்ததாக இரு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனின் மருத்துவ அறிக்கையை மாற்றுவற்காக அம்மருத்துவர்கள் சிறுவனின் குடும்பத்திடமிருந்து 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, மருத்துவமனை ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த ஊழியரே இடைத் தரகர் போல் செயல்பட்டு மருத்துவர்களுக்கு பணம் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.