ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரின் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான பிபவ் குமாரை நீதிமன்ற அனுமதியுடன் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், அவரது காவல் நிறைவடைந்ததால், மீண்டும் டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிபவ் குமாரை மேலும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.