அவதூறு வழக்கில் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி, டெல்லியில் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக அமைச்சர் அதிஷி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 29-ஆம் தேதி அமைச்சர் அதிஷி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.