டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகி கே. கவிதாவின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் கவிதா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, கவிதாவை வெளியே விட்டால், வழக்கின் விசாரணையில் அவர் குறுக்கிடுவார் என அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.